ராயன் ரிலீஸ் : ரசிகர்கள் மத்தியில் எமோஷ்னலான தனுஷ்

Raayan


நடிகர் தனுஷின் 50வது படம் ராயன் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு மாஸ் ஓப்பனிங் கிடைத்துள்ளது எனக் கூறும் அளவிற்கு திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில், ராயன் படத்திற்காக அதிகாலை 6 மணிக் காட்சிகளுக்கு அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று திரையிடப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் அதிகாலை 6 மணிக் காட்சியை நடிகர் தனுஷ் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார். படம் முடிந்த பின்னர் பால்கனியில் இருந்து ரசிகர்களை  நோக்கி கை அசைத்தார்.



தனுஷைப் பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆரவாரம் ஆகினர். மேலும் ரசிகர்கள் ராயன் படத்தைக் கொண்டாடியதைப் பார்த்த தனுஷ் தனது இரண்டு கரங்களையும் தலைக்கு மேல் வைத்து வணங்கி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தனது நெற்றிக்கு நேரக சில வினாடிகள் கையெடுத்து கும்பிட்ட தனுஷ் கிட்டத்தட்ட எமோஷ்னல் ஆகிவிட்டார் என்றே கூறவேண்டும்.

Share this story