தனுஷ் மிகப்பெரிய நடிகர்- ராஷ்மிகா மந்தனா

தனுஷ் மிகப்பெரிய நடிகர்- ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வருபவர் நடிகர் தனுஷ். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்திற்கு முன்னர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தனுஷ் நடித்துள்ள முதல் தெலுங்கு படமாகும். இந்த படத்தையடுத்து முன்னணி இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தனுஷின் இரண்டாவது தெலுங்கு படமாகும். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது. சமீபத்தில் இந்த படத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.

தனுஷ் மிகப்பெரிய நடிகர்- ராஷ்மிகா மந்தனா

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது தனுஷ் குறித்து பேசிய நடிகை ராஷ்மிகா, தனுஷ் மிகப்பெரிய நடிகர், அவருடன் நான் நடிக்க வேண்டும் என அதிகம் விரும்பினேன் என தெரிவித்துள்ளார். 

Share this story