ராதிகா - சரத்குமாரை சந்தித்த தனுஷ்....என்ன காரணம்

ராதிகா - சரத்குமாரை சந்தித்த தனுஷ்....என்ன காரணம்

ராதிகா மற்றும் சரத்குமாரை தனுஷ் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து தனுஷ் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், நடிகர் தனுஷ், நடிகை ராதிகா மற்றும் சரத்குமாரை சந்தித்துள்ளார். ராதிகா - சரத்குமார் தம்பதியின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. 

Share this story