தனுஷ்- மிருணாள் தாக்கூர் லவ்வா?
தெலுங்கு நடிகை மிருணாள் தாக்கூரை நடிகர் தனுஷ் காதலிப்பதாக தகவல் தீயாய் பரவுகிறது.

நடிகர் தனுஷ் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்தும் பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்தசூழலில்நடிகர் தனுஷ் பிரபல நடிகை மிருணாள் தாகூரை காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் தெலுங்கு நடிகை மிருணாள் தாக்கூரை நடிகர் தனுஷ் காதலிப்பதாக தகவல் தீயாய் பரவுகிறது. நடிகர் தனுஷூக்கு விவாகரத்து ஆன நிலையில் இருதரப்பினரிடமும் இருந்து எந்தவித தகவலோ அல்லது மறுப்போ வெளியாகவில்லை. இந்நிலையில் இதுகுறித்து நடிகை மிருணாள் தாகூர் கூறுகையில், “தனுஷ்தான் எனக்கு பிடித்த நடிகர். அவர் நடித்த வாத்தி படத்தை அண்மையில் பார்த்தேன். அவருடைய நடிப்பு என்னை ஈர்த்தது” என்றார்.
சமீபத்தில் தனுஷ் நடிக்கும் “தேரே இஸ்க் மெயின்” படக்குழு சார்பாக மிட்நைட் விருந்து மும்பையில் நடைபெற்றது. இதில் மிருணாள் தாகூர் கலந்து கொண்டார். அதேபோல் மிருணாள் தாகூர் நடித்திருக்கும் “சன் ஆஃப் சர்தார் 2” திரைப்படத்தின் விழாவிலும் தனுஷ் கலந்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

