"உசுரே நீதானே" இசைப்புயலை கொண்டாடிய தனுஷ்!

ARR dhanush

நடிகர் தனுஷ் தான் தற்போது கோலிவுட்டின் எந்தப் பக்கம் திரும்பினாலும் பரபரப்பாக பேசப்படும் நடிகராக இருகின்றார். தனது 50வது படமான ராயன் படத்தை தானே எழுதி, இயக்கி, நடித்தும் உள்ள தனுஷ்,  ராயன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பினால் தற்போது கோவில் கோவிலாகச் சென்று வழிபட்டு வருகின்றார்.

ராயன் படம் ஒருபுறம் வெற்றிகரமான ஓடிக்கொண்டு இருக்க, தயாரிப்பாளர் சங்கமோ தனுஷ் மீது மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, " நடிகர் தனுஷ் அவர்கள் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, " நடிகர் தனுஷ் குறித்து எந்தவிதமான புகாரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து இதுவரை எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் அளிக்கப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார். தன்னைச்சுற்றி மகிழ்ச்சியான விஷயங்களும் பிரச்னைகளும் சர்ச்சைகளும் நிறைந்து காணப்படுவதால் இன்றைக்கு தமிழ் சினிமாவின் டாக் ஆஃப் தி நியூஸ்-ஆகவே தனுஷ் மாறிவிட்டார். இந்நிலையில் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ராயன் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார், மேலும் தனது பதிவில் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.


அந்த வீடியோவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மலேசியாவில் நடத்திய இசை நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ. அந்த வீடியோவில் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 1995ஆம் ஆண்டில் இருந்து தற்போது ரிலீஸ் ஆகியுள்ள ராயன் படம் வரை தான் இசை அமைத்த பாடல்களின் பின்னணி இசைகளை கோர்த்து ஒரு வீடியோவாக வெளியிட்டிருந்தார். அதில் பாம்பாய் படத்தில் இருந்து சமீபத்தில் ரிலீஸ் ஆன ராயன் படம் வரை இடம் பெற்றுள்ள பின்னணி இசைகள் இடம் பெற்றிருந்தது. அந்த வீடியோவில் ராயன் படத்தில் இடம் பெற்றுள்ள, " உசுரே நீதானே.. நீ தானே" என்ற வரிகள் வரும்போது திரையில் ஏ.ஆர் ரஹ்மான் தோன்றியதால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் அந்த வீடியோவில் ராயன் படத்தின் போஸ்டரும் இடம் பெற்றிருந்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்த வீடியோவைப் பகிர்ந்த தனுஷ், " நான், 'உசுரே நீதானே.. நீ தானே' என்ற இரண்டு வரிகளை எழுதும்போது அது இந்த அளவிற்கு ஒரு ஐகானிக் வரிகளாக மாறும் என நினைத்துப் பார்க்கவில்லை. உங்ளின் மெலடியால் இது சாத்தியமாகியுள்ளது. உண்மையிலேயே என மெய் சிலிர்க்கின்றது ஏ.ஆர். ரஹ்மான் சார்" என பதிவிட்டுள்ளார். 

Share this story