“உலக அளவில் இந்தப் படத்தை கொண்டாடுவார்கள்” - தனுஷ் பாராட்டு
மாமன்னன் படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை. இப்படம் அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நான்கு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்குகின்றனர்.
Mari selvaraj’s vazhai from Tom. Get ready to smile , laugh, clap and cry. Get ready to dive into a world that will shake you and a life that will shock you. Vazhai is a beautiful creation thats going to be celebrated by cinema lovers all over the world. All the very best to…
— Dhanush (@dhanushkraja) August 22, 2024
null
இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இதற்கிடையே இப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்த பல திரைப்பிரபலங்கள், அவர்களின் சமூக வலைதளபக்கத்தில் படக்குழுவை பாராட்டி வருகின்றனர். இயக்குநர் பாலா மனமுடைந்து பாராட்டு தெரிவித்ததை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் கார்த்தி, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் படக்குழுவை பாராட்டியிருந்தனர். இந்த நிலையில் தனுஷ் தற்போது வாழை படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாரி செல்வராஜின் வாழை நாளை வெளியாகவிருக்கிறது. சிரிக்கவும், கைதட்டவும் அழுகவும் தயாராகுங்கள். இந்தப் படத்தில் வரும் வாழ்க்கை உங்களை உலுக்கும். அதிர்ச்சியடையவும் செய்யும்.
வாழை ஒரு அழகான படைப்பு. உலக அளவில் சினிமா ரசிகர்கள் கொண்டாடுவார்கள்” எனக் குறிப்பிட்டு மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்து குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்திருந்தார் தனுஷ். இதையடுத்து மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.