அழகான காதல் பேசும் ‘மார்க்கழி திங்கள்’... ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தனுஷ் !

MargazhiThingal
 மனோஜ் பாரதிராஜா இயக்கும் 'மார்கழி திங்கள்' படத்தின் முதல் பார்வையை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முன்னணி இயக்குனராக பாரதிராஜாவின் மகன் மனோஜ், தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்துக் கொண்டிருந்தார். நடிப்பில் பெரிய அளவில் சாதிக்க முடியாத நிலையில் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். இவர் ஏற்கனவே இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அந்த அனுபவத்தை வைத்து தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். 

#MargazhiThingal

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடிக்கிறார். இதுதவிர முழுக்க முழுக்க புதுமுகங்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை பிரபல இயக்குனர் சுசீந்திரன், தனது வெண்ணிலா பிரொக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார். இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். 

இந்நிலையில் மார்க்கழி திங்கள் என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். கிராமத்து கதைக்களத்தில் அழகான காதல் கதையில் இப்படம் உருவாகிறது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் பாரதிராஜா கையில் ஊன்றுகோலுடன் நின்றிருக்கும்படியான புகைப்படம் இடம்பெற்றுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. 

 

 

Share this story