யம்மாடியோவ்…….இவ்வளவா! - கல்லா கட்டிய ‘கேப்டன் மில்லர்’ ப்ரீ ரிலீஸ் பிசினஸ்.

photo

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஒரு பெரிய தொகையை வசூலித்து பலரையும் வாஉ பிளக்க வைத்துள்ளது. இதனை அறிந்த சினிமா வட்டாரம் என்ன இவ்வளவு தொகையா! அதுவும் ரிலீச் ஆவதற்கு முன்பே! என மிரண்டு போய்யுள்ளனர்.

photo

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் தனுஷ், நடிப்பில் உருவாகியுள்ள படம்கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து  சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

photo

தனுஷ் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக வெளியாகவுள்ள இந்த படத்தின் பிசினஸ் தற்போது சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதன்படி படத்தின் வசூல் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே 100 கோடியை தொட்டு விட்டதாக விவரம் அறிந்த வட்டாரத்திலிருந்து தகவல் வந்துள்ளது. இதனை அறிந்த பலரும் வாயடைத்து போயுள்ளனர். ஹாலிவுட் தரத்தில் உருவாகி வரும் இந்த படம் நிச்சயம் தனுஷின் சினிமா வாழ்வில் தவிர்க்க முடியாத படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share this story