நடிகர் தனுஷ், சிம்பு, விஷால் மற்றும் அதர்வா ஆகிய நான்கு பேருக்கு ரெட் கார்ட்!

நடிகர் தனுஷ், சிம்பு, விஷால் மற்றும் அதர்வா ஆகிய நான்கு பேருக்கு ரெட் கார்ட்!

நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால் மற்றும் அதர்வா ஆகிய நான்கு பேருக்கு ரெட் கார்டு வழங்க, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் 4 பேருக்கு ரெட் கார்டு வழங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார் அளித்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவடையாத மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை மேற்கோள்காட்டி அவருக்கு ரெட் கார்ட், வழங்கப்பட்டது. அதேபோல, நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக கையாளாது தொடர்பாக ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. நடிகர் தனுஷூக்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டது. தேனாண்டாள் முரளி தயாரித்த படத்தில், 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படுத்தியதே அவர் மீது உள்ள புகார். இறுதியாக, தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வாவுக்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டது.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு அளிக்கப்பட்ட சம்பவம், திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story