அருண் விஜய்யின் படத்தில் பாடிய தனுஷ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

arun vijay

அருண் விஜய் நடித்துள்ள ‘ரெட்ட தல'  தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் ‘ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அருண் விஜய்யின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.



இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் ரெட்ட தல திரைப்படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்பாடல் ஒரு மெலடி பாடலாக உருவாகியுள்ளது. தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லி கடை திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this story