இட்லி கடை எப்படி இருக்கும்? விமர்சனத்தை நம்பாதீங்க- தனுஷ்

ச்

வடசென்னை 2 பாகம் அடுத்தாண்டு வெளியாகும்  என கோவையில் நடந்த "இட்லி கடை" திரைப்பட  ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் தனூஷ் தெரிவித்தார். 

அந்த ரிவ்யூலாம் நம்பாதீங்க... இட்லி கடை டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேச்சு


நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது இதில் நடிகர் தனுஷ் பார்த்திபன் சத்யராஜ் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடகர் ஸ்வேதா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் அப்போது இரண்டு முறை இட்லி கடை திரைப்படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அப்போது நிகழ்ச்சிக்கு வந்த தனூஷ் ரசிகர்கள்  முந்தியடித்து முன்னால் செல்ல முயன்றதால்  குழந்தைகளுடன் வந்த பெண்கள் நெரிசலில் சிக்கினர். மேலும் 4 பெண்கள் மயங்கி விழுந்ததால் அவர்களை போலீசார் மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர். இதனிடையே மேடையில் தனூஷ் பேசத் துவங்கிய போது திடிரென தனூஷ் ரசிகர் ஒருவர் பாதுகாப்புகளை மீறி மேடை மீது ஏறி புகைப்படம் எடுக்க முயன்றார். அப்போது பாதுகாவலர்களை இளைஞரை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர், அப்போது தனூஷ் இளைஞரை மேலே அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனால் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. 


நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், “எனக்கு சமைக்க ஆசை, அதே துறையில் படிக்கவும் ஆசைப்பட்டேன். எனக்கும் அப்படியே தான் படமும் அமைகிறது. நாம் எண்ணம் போல வாழ்க்கை. இளைஞர்கள் என்ன சாதிக்க விரும்புகிறோம் என நம்ப வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். கருத்து கூறுகிறேன் என என்ன வேண்டாம்.  என் ரசிகர்கள் யாரு வம்புக்கும் போக மாட்டாங்க. இது எனக்கு  பெரிய மகிழ்ச்சி உள்ளது. இப்படம் ஒரு சாதாரன படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். காலை 8 மணிக்கே வரும்  விமர்சனத்தை நம்பாதீங்க, 12 மணிக்கு தான் தெரியும். சினிமாவிற்கு இது மிகவும் தேவை. அனைவரின் படமும் ஓட வேண்டும்.  சரியான விமர்சனம் பார்த்து நீங்கள் முடிவு செய்யும். வடசென்னை - 2  அடுத்த ஆண்டு வர உள்ளது” என தெரிவித்தார்

Share this story