இன்று மாலை வெளியாகும் ‘கேப்டன் மில்லர்’ முக்கிய அறிவிப்பு... ஆர்வத்துடன் எதிர்நோக்கும் தனுஷ் ரசிகர்கள் !

captain miller

 தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘நானே வருவேன்’ தோல்விக்கு பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களை வெற்றியாக்க தனுஷ் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது. 

captain miller

தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

பிரீயட் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது என்ன மாதிரியான அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

Share this story