'கேப்டன் மில்லர்' ஃப்ர்ஸ்ட் லுக்... தனுஷ் கொடுத்த சூப்பர் அப்டேட் !

captain miller

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'கேப்டன் மில்லர்' புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் தனுஷ், நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இந்த படத்தை 'ராக்கி', சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 

captain miller

இந்த படத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது. அதேபோன்று இப்படத்தின் டீசர் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


 


 


 

Share this story