தனுஷூவுக்காக சம்பவம் செய்யும் பிரபல இயக்குனர்... 'கேப்டன் மில்லர்' மாஸ் அப்டேட்

dhanush

 தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இணைந்துள்ளார். 

'ராக்கி', சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 

dhanush

இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. 

 சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த மாதமும், டீசர் வரும் ஜூலை மாதமும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இணைந்துள்ளார்‌. தனுஷூக்காக பாடல் ஒன்றை அவர்  எழுதியுள்ளார். இந்த பாடல் ஓபனிங் பாடலாக வரும் என கூறப்படுகிறது. 

 

Share this story