தனுஷ் நடித்த 'குபேரா' படத்தின் முதல் பாடல் ப்ரோமோ ரிலீஸ்...!

தனுஷ் நடித்த 'குபேரா' படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51ஆவது திரைப்படமாகும்.
ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
#Kuberaa1stSingle promo is out now!
— Dhanush (@dhanushkraja) April 15, 2025
Tamil: https://t.co/pMoIPMBDfy
Telugu: https://t.co/WgKjAehyMK
Hindi: https://t.co/COW1DRUvkb
Kannada: https://t.co/ONOemecIbB
Malayalam: https://t.co/DZ8UCPxLoD
Stay tuned — full song drops on 20th April 🤩 pic.twitter.com/uxg7j7xb4K
இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இத்திரைப்படம் வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படக்குழு இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் வரும் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பாடலுக்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.