தனுஷ் நடித்த 'குபேரா' படத்தின் ரிலீஸ் அப்டேட்
நடிகர் தனுஷின் குபேரா பட ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது.இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு குபேரா என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதில் தனுஷ் தவிர நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே திருப்பதி, மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்தது இந்த படத்தில் நடிகர் தனுஷ், பாடல் ஒன்றை பாடி இருப்பதாகவும் விரைவில் இப்பாடல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படம் 2025 பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி, குபேரா திரைப்படமானது 2025 ஜூன் மாதம் 20ஆம் தேதி திரைக்கு வரும் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.