அரசியல் த்ரில்லர் படமாக உருவாகும் ‘D51’... தனுஷ் படத்தின் புதிய அப்டேட் !

dhanush

நடிகர் தனுஷின் 51வது படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 

‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு பிறகு தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இயக்குனர் சேகர் கமுலா ஹேப்பி டேஸ், லீடர், பிடா, லவ் ஸ்டோரி போன்ற வெற்றிப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். 

dhanush

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை சுமார் 125 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.  ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இந்தபடத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜூனா நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். 

இந்நிலையில் இந்த படம் அரசியல் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகவுள்ளதாம். 40 வருடத்திற்கு முன்னர் நடக்கும் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் நடிகர் தனுஷ் அரசியல் தலைவராக நடிக்கிறார். தனுஷ் அரசியல் படத்தில் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story