தமிழ், தெலுங்கில் பட்டையை கிளப்பும் ‘வாத்தி’... ஒரே நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா ?

vaathi

தனுஷின் ‘வாத்தி’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி’.  இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், கென் கருணாஸ், சமுத்திரக்கனி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

vaathi

‘வாத்தி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை செவன் கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டது.  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியான இப்படத்தின் மூலம் தெலுங்கிலும் நடிகர் தனுஷ் அறிமுகமாகியுள்ளார். 

vaathi

கல்வி வியாபாரமாகிவிட்டதை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வெளியாகி தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் முதல் நாளில் 5.44 கோடியும், அதற்கு இணையாக தெலுங்கில் 4.52 கோடியும் வசூலித்துள்ளது. அதேபோன்று கர்நாடகாவில் 1.25 கோடியும், கேரளாவில் 0.2 கோடியும், வெளிநாட்டில் 3.25 கோடியும் வசூலித்துள்ளது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் 14.85 கோடி வசூல் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story