100 கோடி கிளப்பில் இணைந்த 'வாத்தி'... அசுர சாதனையை கொண்டாடும் ரசிகர்கள் !

vaathi

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'வாத்தி' திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி’. முதல் முறையாக இந்த படத்தின் மூலம் நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 

vaathi

இந்த படத்தை ‘தோழி பிரேமா', 'மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், கென் கருணாஸ், சமுத்திரக்கனி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

கடந்த மாதம் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியான இந்த படம் உலகம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் முதலில் 15 கோடியும், 8 நாட்களில் 75 கோடியும் வசூலித்திருந்தது.  இந்நிலையில் இந்த படம் தற்போது 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this story