ரசிகர்கள் எதிர்பார்த்த ‘வா வாத்தி’... ‘வாத்தி’ வீடியோ பாடல் வெளியீடு !

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தி’ வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ‘வாத்தி’. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் மூலம் முதல்முறையாக தெலுங்கு படம் படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன், முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரகனியும் நடித்திருந்தனர்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தை 'தோழி பிரேமா', 'மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
ஜிவி பிரகாஷ் இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகி வெளியானது. அதில் ‘வா வாத்தி’ பாடல் ரசிகர்கள் கொண்டாடும் பாடலாக மாறியது. தனுஷ் எழுதிய இந்த பாடலை ஸ்வேதா மோகன் பாடியிருந்தார். லிரிக்கல் பாடலாக வெளியான இப்பாடல் யூடியூப்பிலும் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ‘வா வாத்தி’ பாடலின் வீடியோ வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#VaaVaathi full video song is here ??
— Shreyas Media (@shreyasgroup) March 14, 2023
?? https://t.co/HiREwdpowI
A @gvprakash musical ??#Vaathi @dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @_ShwetaMohan_ @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @AdityaTamil_ @SitharaEnts @7screenstudio @Fortune4Cinemas #SrikaraStudios pic.twitter.com/Pa4UzpTLhp