சாட்டையை சுழற்றியுள்ளாரா ‘வாத்தி’.. சுட சுட வெளியான ட்விட்டர் விமர்சனம் !

vaathi

 தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி‘ படத்தின் ட்விட்டர் விமர்சனம் வெளியாகியுள்ளது. 

முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி‘. தனியார் மயமாக்கப்பட்ட, வணிகமயமாக்கப்பட்ட கல்வி, கல்வியின் முக்கியத்துவம் ஆகியவற்றை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் வாத்தியராக நடித்துள்ளார். 

vaathi

இந்த படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாகவும், சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். 

vaathi

தற்போது ட்விட்டர் விமர்சகர்களின் கருத்துக்கள் என்ன என்பதை பார்க்கலாம். 

இந்த படம் தரமான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் பகுதி நன்றாக உள்ளது. கதை உருவாக்கம், வசனம், பாடல்கள், எமோஷ்னல் ஆகியவை இடம்பெற்றது. இரண்டாம் பாதி முழுவதும் எமோஷ்னலாக உள்ளது. பல மொழிகளில் வெற்றிப்படமாக இப்படம் அமைந்துள்ளது. 

 

Share this story