உதவி இயக்குநர் திருமணம்: சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த நடிகர் ‘தனுஷ்’.

photo

கோலிவுட்டில் முன்னணி நடிகரான  தனுஷ், தன்னுடைய உதவி இயக்குநர் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார்.

photo

பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், கோலிவுட்டை கடந்து, பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் வரை சென்று பட்டையை கிளப்பி வருகிறார். இவர் நடிகர் மட்டுமல்லாது, பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக உள்ளார். இந்த நிலையில் புதிதாக இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அவரது 50வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். அந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம்,சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா என பலர் நடித்து வருகின்றனர்.

photo

இந்த நிலையில் தனுஷின் 50வது படத்தில் அவருக்கு உதவி இயக்குநராக பணியாற்றும் ஆனந்த் என்பவருக்கு திருமணம் நடந்துள்ளது. படப்பிடிப்பு பிசியில் அதில் கலந்துகொள்ள முடியாததால் அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார் தனுஷ், இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Share this story