சந்திரபாபுவின் பயோபிக் படத்தில் நடிக்கிறாரா தனுஷ்?
நடிகர் தனுஷ், காமெடியன் சந்திரபாபுவின் பயோபிக் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் கடைசியாக ராயன் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில் அதை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அடுத்தது நடிகர் தனுஷ் குபேரா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இதற்கிடையில் தேரே இஷ்க் மெய்ன் படத்திலும், அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து திரைத்துறையில் பிஸியாக பணியாற்றி வரும் நடிகர் தனுஷ், இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்க போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ், பிரபல நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் பயோபிக் படத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. நகைச்சுவை நடிகர் சந்திரபாபு கடந்த 1940 காலகட்டங்களிலேயே தன்னுடைய திரைப்பயணத்தை எம்.ஜி.ஆர் சிவாஜி, ஆகியோருக்கு நிகராக புகழ்பெற்று விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.