‘கேப்டர் மில்லர்’ இயக்குனருடன் மீண்டும் இணையும் தனுஷ்.. அட்டகாசமான அப்டேட்

dhanush

‘கேப்டன் மில்லர்’ இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ராக்கி, ‘சாணிக் காயிதம்’  ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள   திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.  சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டது. 

dhanush

இப்படம் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தையடுத்து இரண்டாவது முறையாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தை தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 

dhanush

இதற்கிடையே ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு நடிகர் தனுஷ், தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையடுத்து தெலுங்கில் சேகர் கமுலாவுடன் ஒரு படம், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராயுடன் ஒரு படம் என அடுத்தடுத்து பிசியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story