என்றும் சூப்பர் ஸ்டார்- 'ஜெயிலர்' குறித்து நடிகர் 'தனுஷ்' போட்ட ட்வீட் வைரல்.

photo

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸடார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள திரைப்படம் ஜெயிலர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு படம் தலைவரின் படம் ரிலீஸ் ஆவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி என மல்டி ஸ்டார் படத்தில் நடித்திருப்பதாலும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் ஜெயிலர் குறித்து நடிகரும் சூப்பர் ஸ்டாரின் முன்னாள் மருமகனான தனுஷ் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அது வைரலாக பரவி வருகிறது.

photo

அதாவது தனுஷ் சூப்பர் ஸ்டார் ரசிகர் என நாம் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் தனது சமூகவலைதள பக்கத்தில் “It’s JAILER week”  என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷ் தனது மனைவியை பிரிந்தாலும் மாமனார் மீதுள்ள  பாசம் குறையவில்லை என கூறிவருகின்றனர். தனுஷின் இந்த வேகத்தை பார்த்தால் லிங்கா, கபாலி, காலா போன்ற படங்களை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்ததை போல இந்த படத்திற்கும் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story