‘வா வாத்தி’... Reprise Version பாடல் வெளியீடு

vaa vaathi

 தனுஷின் ‘வாத்தி’ படத்தின் ‘வா வாத்தி’ Reprise Version பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி’.  இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், கென் கருணாஸ், சமுத்திரக்கனி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

vaa vaathi

சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழில் வாத்தியாகவும், தெலுங்கில் சார் என்ற பெயரிலும் உருவாகி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவான கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. 

vaa vaathi

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘வா வாத்தி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தனுஷ் எழுதிய இந்த காதல் மெலோடி பாடலை ஸ்வேதா மோகன் பாடியுள்ளார்.  இந்நிலையில் வா வாத்தி.. Reprise Version வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story