‘தனுஷை அவன் என்று கூறுவது மரியாதைதான்’ - இயக்குனர் பாரதிராஜா நெகிழ்ச்சி !

bharathi raja

தனுஷை அவன் என்று கூறுவது மரியாதைதான் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வாத்தி'. இந்த படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் தனுஷ் வாத்தியராக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது.‌

இதையொட்டி 'வாத்தி' படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது.‌ இந்த நிகழ்ச்சியில் தனுஷ், பாரதிராஜா, ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, தனுஷ் நீ வச்ச குறி தப்பாது. உலகத்தையே கையில் வச்சுருக்க. நீ கடவுளுடைய குழந்தை. நம்ம பய எவனாச்சும் ஹாலிவுட் பக்கம் போக முடிந்ததா என‌ கேள்வி எழுப்பினார்.‌

தனுஷை ஒரு நடிகராக பார்க்கிறோம். ஆனால் அவன் மனிதன். இதுபோன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு என் அனுபவம் காரணம் அல்ல. என் மேல் வைத்த பாசத்திற்காக அழைத்திருக்கிறார். திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் சொல்லி கொடுத்ததை பாதிதான் நடித்தேன். அதற்கே இந்த அளவிற்கு அன்பு காட்டுகிறார். தனுஷை அவன் என்று‌ கூறுவது மரியாதைதான். அவன் என்‌மகன் மாதிரி என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Share this story