‘வாத்தி’ நாம மிஸ் பண்ண காட்சி... புதிய அப்டேட் வெளியீடு !

vaathi

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியிடப்பட்டுள்ளது. 

கல்வி என்பது சமீபகாலமாக வியாபாரமயமாகி விட்டதை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ள ‘வாத்தி’.தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த நடிகர் தனுஷ் மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  'தோழி பிரேமா', 'மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்கியுள்ளார். 

vaathi

இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன், முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரகனியும் நடித்திருந்தனர். சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ரசிகர்களின் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ள இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. அதேபோன்று ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

vaathi

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் நேரம் காரணமாக நீக்கப்பட்டுவிட்டது. அந்த காட்சிகளை தற்போது படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


 

Share this story