தாறுமாறாக வருகிறது தனுஷ் ‘வாத்தி’ முதல் பாடல்... முக்கிய அறிவிப்பை வெளியீடு !

vaathi

 தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘வாத்தி’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. முதல் முறையாக இந்த படத்தின் மூலம் நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

vaathi

'மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இந்த படத்தில் சாய் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள ‘வாத்தி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 10-ஆம் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகிறது. இந்த பாடலை கேட்க ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். இந்த பாடலை தனுஷ் எழுதியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பாகும். 

Share this story