மிரட்ட வருகிறார் கணக்கு வாத்தியார்.. தனுஷின் ‘வாத்தி’ டிரெய்லர் அறிவிப்பு !

vaathi

 தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி’. இந்த படத்தில் நடிகர் தனுஷ் கணக்கு வாத்தியராக நடித்துள்ளார். கல்வி வணிகமயமாவது குறித்து பேசியுள்ள இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் முதல்முறையாக தெலுங்கில் நடிகர் தனுஷ் அறிமுகமாகிறார். 

vaathi

இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் வெளியாகிறது.  

வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான பாடல்கள் வெளியிடப்பட்டது. ஏற்கனவே ‘வா வாத்தி’ உள்ளிட்ட சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 


 

Share this story