தனுஷ்- விக்னேஷ் ராஜா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!
Sun Mar 23 2025 9:27:27 AM

போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.
தனுஷ் தற்போது ஹிந்தியில் 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இட்லி கடை, குபேரா படத்தின் மீதமுள்ள படப்பிடிப்புகளில் நடிக்கவுள்ளார்.
அதன் பின்னர் தமிழில் ‛போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்குகின்றனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.