கண்டாரா படக்குழுவினருக்கு நடிகர் தனுஷ் பாராட்டு!!

dhanush and elan

கன்னடத்தில் சமீபத்தில் வெளியான  கண்டாரா  திரைப்படம்  ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.   கர்நாடகாவில் நடைபெறும் கம்பாலா வீர விளையாட்டை மையப்படுத்தி கண்டாரா திரைப்படம் உருவாகியுள்ள இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. 

tn

கே ஜி எஃப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான HOMBALE பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள கண்டாரா திரைப்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார் ரிஷப் செட்டி. கண்டாரா திரைப்படத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

tn

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், கண்டாரா மனதை வருடும்!! கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.. ரிஷப் ஷெட்டி, உங்களைப் பற்றி நீங்கள் மிகவும் பெருமைப்பட வேண்டும். வாழ்த்துக்கள் HOMBALE பிலிம்ஸ்.  படத்தின் அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு பெரிய அரவணைப்பு. கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். 



முன்னதாக  கண்டாரா திரைப்படத்தின் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் சிலம்பரசன்.T படக்குழுவினருக்கு கேக் அனுப்பி தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

Share this story