மீண்டும் படம் தயாரிக்கும் தனுஷ்.. முக்கிய அறிவிப்பு !

Wunderbar

வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் மீண்டும் படம் தயாரிக்கவுள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். 

தென்னிந்தியாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் கடந்த 2009ம் ஆண்டு வொண்டர்பார் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான '3' படம் தான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம்..

Wunderbar

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, விக்னேஷ் சிவன்- விஜய்சேதுபதி கூட்டணியில் வெளியான 'நானும் ரௌடி தான்' உள்ளிட்ட படங்களை தயாரித்தார். இதற்கிடையில் காக்கா முட்டை, விசாரணை ஆகிய விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்ற படங்களையும் தயாரித்து தயாரிப்பில் அசத்தினார். 2018-ம் ஆண்டு தனுஷ் நடித்த மாரி 2 தான் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த கடைசி படமாக இருந்தது.

Wunderbar

அதன்பிறகு எந்த படத்தை வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்காமல் இருந்து வந்தது.  இந்நிலையில் மீண்டும் தயாரிப்பில் களமிறங்க தனுஷ் திட்டமிட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதோடு இந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று இரவு 7.30 மணிக்கு வெளியாகவுள்ளது. 

Share this story