தனுஷ் 55வது படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் அப்டேட்...!

D55

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகர் தனுஷ் தற்போது 'இட்லி கடை' படத்தில் இயக்கி நடித்து முடித்துவிட்டு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஹிந்தி படமான 'தேரே இஸ்க் மெயின்' என்ற படத்தில் நடித்து வருகிறார். டெல்லியில் இப்படத்தின் படபடப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

dhanush

அந்த படத்தில், அவருக்கு ஜோடியாக கிர்த்தி சனோன் நடித்து வருகிறார். இதனையடுத்து, தனுஷின் 55வது படம் அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிறது. இதனை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். 

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமரன் படத்தை போல் இந்த படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. 


 

Share this story