தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் வசூல்
1705314174200

நடிகர் தனுஷின் ஆக்ஷன் அதிரடியில் உருவாகியிருக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். படத்தில் பிரியங்க்கா அருள் மோகன், சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்டம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரசிகர்களிடையே நல்ல விமர்சனம் பெற்று வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில் கேப்டன் மில்லர் படம் இதுவரை சுமார் 38 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.