தனுஷ் நடிக்கும் இந்திப் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வைரல்

D

திரையுலகில் நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர் தனுஷ். இந்திய மொழிகள் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். தமிழில் இவர் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வருகிற 21-ம் தேதி ரிலீசாக இருக்கிறது.Dhanush

இந்த நிலையில், நடிகர் தனுஷ் நடிக்கும் இந்தி திரைப்படமான "தேரே இஸ்க் மேன்" படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இதனை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் நடிகர் தனுஷ் கேரவனில் இருந்து வெளியே வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கேரவனில் இருந்து வெளியே வரும் போது வீடியோ எடுக்கப்படுவதை உணர்ந்த நடிகர் தனுஷ் கேமராவை நோக்கி கையசைக்கிறார்.


இதோடு, படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் ஒருத்தரை துரத்திக்கொண்டு ஓடுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. ஆனந்த் எல் ராய் தயாரித்து இயக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை விஷால் சின்கா மேற்கொள்ள, ஆக்ஷன் இயக்குநராக ஷாம் கௌஷால் பணியாற்றுகிறார்.

Share this story