தனுஷ் இயக்கியுள்ள ‘இட்லி கடை’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ?

Dhanush

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்துக்குப் பிறகு தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் ‘இட்லி கடை’. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது.  மேலும் இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. idly kadai

 ஆனால், ‘குட் பேட் அக்லி’ டீஸர் வெளியான பின்பு, ‘இட்லி கடை’ வெளியாக வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகின. இதனை உறுதி செய்யும் விதமாக ஏப்ரல் 10-ம் தேதி வெளியீட்டில் இருந்து பின்வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.  இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இன்னும் முழுமையாக படப்பிடிப்பு முடிவடையாததும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘குபேரா’ படம் ஜூன் 20-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Share this story