விரைவில் ஓடிடியில் வெளியாகிறது தனுஷின் குபேரா..!
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தான் குபேரா. தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, சுனைனா, கே பாக்யராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் இந்தப் படம் வெளியானது.கடந்த மாதம் ஜூன் 20 ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் தமிழ் சினிமாவில் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது.
மொத்தமாக தமிழ் சினிமாவில் ரூ.20.55 கோடி வசூல் குவித்த குபேரா தெலுங்கு சினிமாவில் ரூ.63.9 கோடி வசூல் குவித்தது. இந்தியா முழுவதும் 101.8 கோடி வசூல் குவித்த குபேரா உலகளவில் ரூ.31.2 கோடி வசூல் குவித்தது. இதன் மூலமாக உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் குபேரா ரூ.133 கோடி வசூல் குவித்திருக்கிறது. ஆனால், இது குறித்து குபேரா படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை.
இந்தப் படத்தில் தனுஷின் நடிப்பின் மற்ற எந்த படங்களிலும் இல்லாத ஒரு வகையில் இருந்தது. இது தனுஷிற்கு 2ஆவது தெலுங்கு படம். இந்தப் படத்திற்காக தனுஷிற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தான் குபேரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, குபேரா படம் வரும் 18ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 20ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் ஒரு மாதம் முழுவதும் நிறைவடைவதற்கு முன்னதாக அமேசான் பிரைம்வீடியோவில் வெளியாக இருக்கிறது.

