தனுஷ் பட டீசர் அப்டேட் : ரசிகர்கள் உற்சாகம்..

dhanush

ராயன் படத்திற்கு பிறகு தனுஷ் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் இளையராஜா பயோ பிக், பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராயின் ‘தேரே இஷ்க் மெய்ன்’, மாரி செல்வராஜுடன் ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார். அதே சமயம், இயக்கத்திலும் கவனம் செலுத்தி வரும் தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் இட்லி கடை என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதோடு நடித்தும் வருகிறார். இப்படம் தனுஷின் 52வது படமாக உருவாகி வருகிறது. 

இதில் ‘குபேரா’ படம் தனுஷின் 51வது படமாக உருவாகி வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.  


இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, பாங்காங், மும்பை பகுதிகளில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில் தனுஷ், நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகாவின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ அடுத்தடுத்து வெளியானது. பின்பு தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ஆம் தேதி ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு தனுஷுக்கு படக்குழு வாழ்த்து தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஜிம் சர்ப் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்தின் டீசர் வருகிற கார்த்திகை பூர்ணிமா அன்று(15.11.204) வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this story