தனுஷ் இயக்கிய `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் அடுத்த பாடல் விரைவில்...
1728474920000
நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' மற்றும் இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் இளம் சமூதாயத்தின் காதல் பிரச்சனைகளை கொண்ட ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ பாடல் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது. இதைத்தொடர்ந்து படத்த்ன் அடுத்த பாடல் இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும் என ஜிவி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த பாடல் ஒரு காதல் தோல்வி பாடலாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இப்பாடலை தனுஷ் பாடியிருப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.