தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ 3வது பாடல் டிச.20-ல் ரிலீஸ்
தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் 3வது சிங்கிள் வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.
‘பவர் பாண்டி’, ‘ராயன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள புதிய படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
#Neek 3rd single #yedi written by @Lyricist_Vivek pic.twitter.com/jxyQ356pWp
— Dhanush (@dhanushkraja) December 18, 2024
அண்மையில் வெளியான முதல் சிங்கிள் ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாவது சிங்கிள் ‘காதல் ஃபெயில்’ தனுஷ் ஸ்டைலில் வெளியானது. தற்போது இந்தப் படத்தின் 3வது சிங்கிளான ‘ஏடி’ பாடல் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகிறது. படம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.