ரஜினிகாந்த் மருத்துவராக நடிக்கும் தர்மன் பட அப்டேட்
1787707852000
ரஜினிகாந்த் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படம் `தர்மன்’. சிம்ரன், ராசி கன்னா முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மகேந்திரனின் டர்மெரிக் மீடியா இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது.
ஜூன் 24ம் தேதி பூஜையுடன், இப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் அடுத்த நாளே (ஜூன் 25) படப்பிடிப்பு தொடங்கியது. ரஜினிகாந்த் மருத்துவராக நடிக்கும் இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது என அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம். இதற்கான வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

