ரஜினிகாந்தின் 173-வது படம் - ‘தர்மன்’ திரைப்பட அப்டேட் என்ன தெரியுமா ?

rajini

ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமாக உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஆர்.மகேந்திரனின் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.

இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது நயன்தாரா இணைந்திருப்பது குறித்த அறிவிப்பைத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டருடன் வெளியிட்டு உறுதி செய்துள்ளது. ஏற்கனவே ரஜினிகாந்துடன் இணைந்து ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’ (ஒரு பாடலுக்கு மட்டும்) ‘குசேலன்’, ‘தர்பார்’ மற்றும் ‘அண்ணாத்த’ ஆகிய படங்களில் நயன்தாரா நடித்திருந்த நிலையில், தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story