மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘தீமா’ பாடல்

dheema

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. . 

இப்படத்திற்கு முன்னதாக ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த தலைப்பு என்னுடையது என இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன் தெரிவித்து விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பதாக அறிக்கை வெளியிட்டார். அது மட்டுமின்றி இந்த தலைப்பு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என எல்.ஐ.சி நிறுவனமும் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. 

இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூலை 25ஆம் தேதி அவருக்கு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தது படக்குழு. அதில் படத்தின் பெயரை  ‘எல்.ஐ.கே’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) எனத் தலைப்பை மாற்றினர். இதையடுத்து படத்தில் நடித்துவரும் எஸ்.ஜே. சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் பின்பு கதாநாயகி க்ரித்தி ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்தடுத்து வெளியிட்டனர். 

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு ‘தீமா’ பாடல் வெளியிடப்பட்டது. பாடலில் மூச்சு விடாமல் ஒரு இடத்தில் அனிருத் பாடியிருந்தார். காதல் மெலோடி பாடலாக வெளியான இப்பாடல் யூட்யூபில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங் லிஸ்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

Share this story