'LGM' படத்தை படக்குழுவோடு இணைந்த பார்த்த தோனியின் மனைவி... ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து உற்சாகம் !

lgm

'LGM' படத்தின் FDFS காட்சியை படக்குழுவினரோடு இணைந்து தோனியின் மனைவி சாக்ஷி பார்த்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

பிரபல கிரிக்கெட் வீரராக இருப்பவர் மகேந்திர சிங் தோனி. அவர் தற்போது தனது மனைவி சாக்ஷியுடன் இணைந்து தோனி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக தமிழில் படத்தை தயாரித்துள்ளார். 'LGM' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

LGM

இவர்களுடன் இந்த படத்தில் நடிகை நதியா, காமெடி நடிகர் யோகிபாபு, ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘அதர்வா தி ஆரிஜின்’ என்ற கிராபிக்ஸ் நாவலை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இப்படத்தை இயக்கி்யுள்ளார். அம்மா மற்றும் வருங்கால மனைவி இடையே சிக்கி தவிக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கை மையமாக வைத்து உருவாகும் கதைக்களத்தை கொண்டது இந்த படம். 

LGM

இந்நிலையில் இந்த படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகி உள்ளது. இதையொட்டி இப்படத்தின் FDFS காட்சியை ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானாவுடன் இணைந்து தோனியின் மனைவி சாக்ஷி பார்த்தார். அப்போது ரசிகர்களுடன் இணைந்து செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

 

Share this story