‘டாடா’ இயக்குனருடன் கூட்டணி அமைத்த துருவ்... விரைவில் வெளியாகும் அறிவிப்பு !

dhruv

‘டாடா’ இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் நடிகர் துருவ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வருபவர் நடிகர் துருவ் விக்ரம். நடிகர் விக்ரமின் மகனான இவர், தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி துருவ்வுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. 

dhruv

இந்த படத்தையடுத்து தனது தந்தை விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ படத்தில் நடித்தார்.  அதன்பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருந்தார். முதற்கட்ட பணிகள் நடைபெற்ற வந்த அந்த படத்தில் கபடி வீரராக நடிக்கவிருந்தார். அந்த படத்திற்காக சில பயிற்சிகளையும் துருவ் விக்ரம் மேற்கொண்டு வந்தார். ஆனால் அந்த படம் இன்னும் தொடங்கப்பட வில்லை.

அதனால் சமீபத்தில் ‘டாடா’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த கணேஷ் கே பாபு இயக்கத்தில் துருவ் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தை லைகா புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

 

Share this story