துருவ் விக்ரம் - அனுபமா பரமேஸ்வரன் டேட்டிங்...?

dhruv

நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இருவரும் டேட்டிங் செய்வதாக இணையத்தில் தகவல் உலவி வருகிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் மகன் நடிகர் துருவ் விக்ரம், மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் இருவரும் ஜோடி சேர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பைசன்' படத்தில் நடித்து வருகிறார்கள். இருவரும் காதலிப்பதாக தற்போது புது கிசுகிசு ஒன்று பரவி வருகிறது. அனுபமா - துருவ் விக்ரம் இருவரும் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளிவந்த நிலையில், இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.spotify

Spotify-ல் ப்ளூ மூன் என்கிற பிளே லிஸ்டில் அனுபமா போல் தோற்றமளிக்கும் ஒரு பெண்ணும், துருவ் விக்ரம் போல் தோற்றமளிக்கும் ஒருவரும் முத்தம் கொடுக்கும்படி புகைப்படம் ஒன்று உள்ளது. இதனால் இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்கிற செய்தி பரவ துவங்கிவிட்டது. ஆனால், இந்த பிளே லிஸ்டை இவர்கள் இருவரும் துவங்கவில்லை என கூறப்படுகிறது. சிலர் இது படத்திற்கான விளம்பரமாக இருக்கும் என்கின்றனர். மேலும் இதுவரை இதுகுறித்து அனுபமா மற்றும் துருவ் விக்ரம் இருவரும் விளக்கம் கொடுக்கவில்லை. தற்போது இந்த பிலே லிஸ்ட் பக்கம் நீக்கப்பட்டுள்ளது. 


 

Share this story