‘கில்’ ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம்?

kill

‘கில்’ ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இயக்குநர் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் லக்‌ஷயா, ராகவ் ஜுயல், தன்யா, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்த பாலிவுட் படம் ‘கில்’. இந்தப் படத்துக்கு விக்ரம் மாண்ட்ரோஸ், ஷஷ்வத் சச்தேவ் இசையமைத்திருந்தனர். கரண் ஜோஹர், குனீத் மோங்கா இணைந்து தயாரித்தனர். இப்படம் கடந்த ஆண்டு ஜுலை 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.‘கில்’ படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் கொண்டாடப்பட்டு, படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், ஓடிடி தளத்திலும் இப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் தென்னிந்திய மொழி ரீமேக் உரிமையை ரமேஷ் வர்மா கைப்பற்றி இருந்தார். இதில் ராகவா லாரன்ஸ் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அது சுமுகமாக முடியவடையவில்லை.kill

தற்போது ‘கில்’ தமிழ் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அவருடன் நடிப்பவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனை ரமேஷ் வர்மாவே இயக்கி, தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Share this story