மணத்தி கணேசனின் பயோபிக்கில் நடிக்கும் துருவ் விக்ரம்
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக மாறிவிட்டார் மாரி செல்வராஜ். ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், கர்ணன் படத்தின் மூலம் தன்னை வெற்றி இயக்குனராக நிலை நிறுத்திக்கொண்டார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு உதயநிதியை வைத்து ‘மாமன்னன்’ படத்தை இயக்கினார். அந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ‘மாமன்னன்’ படத்தின் ரிலீசுக்கு முன்னர் சிறிய இடைவெளியில் ‘வாழை’ என்ற படத்தையும் இயக்கி முடித்துள்ளார். சிறிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள அந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதற்கிடையே ‘மாமன்னன்’ படத்திற்கு முன்னரே துருவ் விக்ரமை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருந்தார். ஆனால் உதயநிதி கேட்டுக்கொண்டதால் ‘மாமன்னன்’ படத்தில் கமிட்டானார். ‘மாமன்னன்‘ திரைப்படம் வெளியாகிவிட்ட நிலையில் தற்போது மீண்டும் துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறார். பா ரஞ்சித்தின் நீலம் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படம், அர்ஜூனா விருது பெற்ற பிரபல கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக உள்ளது. இப்படத்திற்காக நடிகர் திருவ் விக்ரம், கபடி பயிற்சி பெற்று வருகிறார். அவருக்கு மணத்தி கணேசன் பயிற்சி அளிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.