பட்டையை கிளப்பும் ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ லிரிக்கல் பாடல்.. நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான ‘துருவ நட்சத்திரம்’ அப்டேட்

Dhruva Natchathiram

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, முன்னா சைமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

DhruvaNatchathiram

நடிகர் விக்ரம் உளவு அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நிகரான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதால் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக இப்படம் வெளியாகாமல் இருக்கிறது. 

DhruvaNatchathiram

இந்நிலையில் ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ லிரிக்கல் வெளியாகியுள்ளது. மாஸாக உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Share this story